கிரிக்கட் நிர்வாகத்துடனான மோதலால் ஓய்வுபெறும் அறிவிப்பை வெளியிட்டாரா திஸர பெரேரா?

0
315
Article Top Ad

இலங்கை கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் திஸர பெரேரா சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை இன்று வெளியிட்டு கிரிக்கட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

திஸர பெரேராவிற்கு தற்போது தான் 32 வயது அதற்குள்ளாக ஓய்வுபெறவேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருப்பதில் காரணம் உண்டு.

திஸர பெரேராவின் ஓய்வு அறிவிப்பு தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள தினேஷ் சந்திமால்

‘ புயல்கள் வரும் போகும் ஆனால் நீங்கள் சற்றே பொறுமையாக இருந்திருக்கலாம். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கட்டில் இன்னமும் நீங்கள் தான் சிறந்த சகலதுறைவீரர்’ எனத் தெரிவித்திருக்கின்றார்.

இது இலங்கை கிரிக்கட் நிர்வாகத்திற்கும் சிரேஷ்ட வீரர்களுக்கும் இடையே மோதல் என்ற அண்மைய செய்தியை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கின்றது.

சிரேஷ்ட வீரர்களுக்கான கொடுப்பனவுகள் சடுதியாக குறைக்கப்படவுள்ளது மாத்திரமன்றி பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களின் போது சிரேஷ்ட வீரர்கள் பலர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதான தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு குஸல் ஜனித் பெரேராவிற்கு ஒருநாள் போட்டியின் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.