உண்மைக் கண்ணோட்டங்கள்: மூலோபாய ரீதியாக வெளிநாட்டு சேவையில் தொழில்வாண்மையினை உட்புகுத்திய கதிர்காமர்

0
225
Article Top Ad

இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளிலிருந்து, முக்கியமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்களின் நிபுணர்களை வெளிநாட்டு சேவையில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

90 களில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் இலங்கையின் வெளியுறவு அமைச்சராக இருந்த மறைந்த லக்ஸ்மன்  கதிர்காமரின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இறுதித் திட்டம் இதனை அடைவதனை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இலங்கையின் இராஜதந்திர நிலையங்களில் தூதுவர் அல்லது உயர்ஸ்தானிகர் பதவிகளுக்கு அடுத்ததாகவுள்ள பதவிகளில் அரசியல் ரீதியான நியமனங்களைக் குறைப்பதே இதன் திட்டமாகும். அது பரஸ்பரமாகவும் திருப்திகரமாகவும் இருந்தது.

வெளியுறவு சேவையின் வருகைக்குப் பின்னர் அரசியலிற்குத் தெரிந்த பல ஆளுமைகள் நியமனங்களைப் பெற்றனர். தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இது மாற்றமடையாமல் உள்ளது.

பல வருடங்களாக ஆட்சேர்ப்பு செய்யப்படாததன் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு சேவை பாரிய தடைகளைச் சந்தித்தது.

பொது இராஜதந்திரம் மற்றும் பொருளாதார இராஜதந்திரத்தில் நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக பல நிலையங்களில் பணியிடங்கள் வெற்றிடமாகும் வரை இது முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டது.

இந்த பற்றாக்குறை புதிய வெளிநாட்டு சேவை ஆட்சேர்ப்பின் பின்னர் ஓரளவிற்கு தீர்க்கப்பட்டது. பொது இராஜதந்திரம் போன்ற சிறப்புச் செயற்பாடுகள் வெளிப்புற தொழில்வாண்மையின் துணையுடன் மேலும் பலப்படுத்தப்படலாம்.

கதிர்காமரின் கீழ், இலங்கை தொடர்பான பாதகமான கருத்துக்களிற்கு மாறாக நேர்மறையான பிம்பத்தை மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருந்தது.

விடுதலைப் புலிகளை சார்ந்த பிரிவினர் தங்களுடைய செய்தியை பரப்புவதற்காக அயராது செயற்பட்டு வந்தனர.  இதனால் முதலீட்டாளர்களிற்கு இலங்கை மீதான நம்பிக்கையீனம் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

அமைச்சினுள் நடைபெற்ற நீண்ட மதிப்பீடுகளானவை வெளியிலிருந்து உட்புகுத்தப்பட்டிருக்க வேண்டிய கவர்ச்சிகரமான சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பாடல் திட்டங்கள் போன்றவற்றின் அவசியத்தினை குறிப்பிட்டது. கதிர்காமர் அவர்கள் பல காரணங்களினால் வெளிப்புற உதவியினை பெறுவதற்கு அவசரப்படவில்லை.

முதலாவதாக அவர் எதிர்பார்த்த முடிவுகளை தர முடியாத அரசியல் செல்வாக்குள்ள நபர்களைத் தவிர்ப்பதில் கவனமாக இருந்தார். இந்த திட்டத்திற்கு எவ்விதமான அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது என்று அவர் கருதினார்.

இரண்டாவதாக, பல்வேறு பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்வாண்மையாளர்கள் அவற்றை செய்வதற்குத் தகுதியானவர்களாக இருப்பதை அவர் உறுதி செய்ய விரும்பினார். எனவே அவர் ஆட்சேர்ப்புத் திட்டத்தை உருவாக்க அமைச்சின் விளம்பரப் பிரிவுடன் இணைந்து பணியாற்றினார்.

இந்தத் திட்டம் தேர்வு செய்யும் முறையினை அவதானத்துடன் வகுத்தது. அதன் பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களிற்கு பதவியில் அமர்த்தப்படுவதற்கு முன்னதாக பல பயிற்சி அமர்வுகள் இடம்பெற்றன.

மூன்றாவதாக, வேலைவாய்ப்பு விதிமுறைகளை வகுத்து அவற்றினை உருவாக்குவதற்கு அப்பால் ஆட்சேர்ப்பு செயல்முறையை கையாள்வதனை அனுமதிக்காமல் இருப்பது தொடர்பில் எச்சரிக்கையாக இருந்தார்.

பத்திரிகைகளில் பதவி வெற்றிடங்களை விளம்பரப்படுத்திய பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு தேர்வு செய்யும் செயல்முறையினை முழுவதுமாக வழங்கியிருந்தார்.

ஆலோசகர் பதவி முறையே இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பை முறையே 10 ஆண்டுகள் அல்லது 7 ஆண்டுகள் அனுபவத்துடன் கோரியிருந்தது.
தேர்வு செயல்முறை எழுத்துப் பரீட்சை மற்றும் இரண்டு நேர்காணல்களை உள்ளடக்கியது. 2

50 இற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துப் பரீட்சையில் பங்குபற்றினர். இதில் 50 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

நேர்காணல்கள் கடுமையாக இருந்ததோடு தகவல் மற்றும் தகவல்தொடர்பு ஆலோசகர்களாக பொறுப்பேற்கக்கூடிய ஐந்து நிபுணர்களை மட்டுமே தெரிவுசெய்தது, அவர்களின் பணி நாட்டிற்கு நாடு வேறுபட்டது.

சர்வதேச ஊடகவியலாளரான அருண குலதுங்க லண்டனில் பணியாற்றுவதற்கும், ராய்ட்டர்ஸில் பணியாற்றிய மொஹான் சமரசிங்க ஒட்டாவாவில் பணியாற்றுவதற்கும், சர்வதேச ஊடகவியலாளரான ராஜிக ஜெயதிலக பாங்கொக்கில் பணியாற்றுவதற்கும்,

இலங்கை சுற்றுலா சபையின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் விபுல வணிகசேகர மலேசியாவில் பணியாற்றுவதற்காகவும், ஊடகவியலாளர் சுகீஷ்வர சேனாதீர புதுடெல்லியில் பணியாற்றுவதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேர்வுகள் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் சுயாதீனமாக நடாத்தப்பட்டதால் பொதுமக்களிடமிருந்து எவ்வித கேள்விகளும் எழுப்பப்படவில்லை.

இம் முயற்சியிலிருந்தான கற்றல் பன்முகத்தன்மை கொண்டது. ஆட்சோப்பு செயல்முறை 8 மாதங்களுக்கு நீடித்தது. ஆனால் தொழில்முறை அனுபவம் மற்றும் கல்வித் தகுதி போன்றவற்றினை சமநிலையாக கொண்டவர்களை பணிக்கு அமர்த்தியது.

சேனாதீர பின்னர் பாரிசில் பணியாற்றினார். தற்போது ஜனாதிபதி செயலகத்தில் ஊடக ஆலோசகராக பணியாற்றுகின்றார். நோர்வேயில் முதலாவது இலங்கை தூதரகத்தை திறப்பதற்காக வணிகசேகர மலேசியாவிலிருந்து ஒஸ்லோவிற்கு அனுப்பப்பட்டார்.

இராஜதந்திரிகளுக்கான நோக்கங்கள் மிகவும் தெளிவாக இருந்தன. வர்த்தம், முதலீடுகள் மற்றும் சுற்றுலாத் துறையினை ஈர்ப்பதற்காகவும் பாதகமான கருத்துக்களை எதிர்கொள்ளவும் இலங்கையின் நேர்மறையான பிம்பத்தை நிலைநாட்டவும் பொது இராஜதந்திர திட்டங்கள் உருவாக்கப்பட்டது.

இந்த நோக்கத்திற்காக திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் நாட்டிற்கு நாடு வேறுபடுவதோடு அமைச்சின் விளம்பரப்படுத்தல் பிரிவின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட வேண்டும்.

ஏனையோரிடையே ‘எதிர்மறையான ஊடகங்களை எவ்வாறு கையாள்வது’ என்ற பயிற்சியும் வழங்கப்பட்டது.

வெளிநாட்டு சேவையில் அதே செயன்முறையினை பின்பற்றியதன் விளைவாக பண்டுக சேனாநாயக்க தென்னாபிரிக்காவிலும் பின்னர் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய ரங்க கலன்சூரிய மலேசியாவிலும் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டனர்.

சில இராஜதந்திரிகள் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். எவ்வாறாயினும், நியமனங்கள் பொது சேவை ஆணைக்குழுவினால் வெளிப்படைத்தன்மையாக மேற்கொள்ளப்பட்டதனால் அவர்களின் பதவிகளை குறைந்தபட்ச தலையீடுகளுடன் பாதுகாத்தது.

இந்த இராஜதந்திரிகளால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முன்னேற்ற அறிக்கைகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. மறைந்த அமைச்சர் எந்த தன்னிச்சையான முடிவுக்கும் ஆதரவாக இருந்தார்.

வெளிநாட்டு சேவையில் நிபுணர்களை உள்வாங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சு இதேபோன்ற செயல்முறையை மறைமுகமாக பின்பற்றும். சேவையில் தற்போது அரசியல் நியமனங்கள் உள்ளன.

அவர்கள் தங்களுக்கு எதிர்பார்த்த தரத்திற்கு மேலாக தங்களை கருதுகிறார்கள் அவர்கள் யாருக்கு சேவை செய்கிறார்கள் என்பதிலிருந்து அரசியல் கவசத்திற்க நன்றி.

தற்போதைய முன்மொழிவு இத்தகைய அழுத்தங்களுக்கு உட்பட்டால், அது நிதி விரயத்திற்கு வழிவகுப்பதோடு வெளிநாட்டு ஊழியர்களை பதவியில் அமரச்செய்து அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்து அடுத்த தலைமுறை பொறுப்பேற்க வழிவகுக்கும்.

இந்த செயல்முறைகளின் ஒரே குறிக்கோள் இலங்கையை உலகத் தலைநகரங்களில் நிலைநிறுத்துவதற்காக நமது வெளிநாட்டு தூதரகங்களை பல திறன்களைக் கொண்ட ஒரே இடமாக மாற்றுவதாகும்.

வெளிநாட்டு உறவு என்பது ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாளும் இருதரப்பு ஃ பலதரப்பு மற்றும் நெறிமுறை ஈடுபாடுகளுடன் மட்டுப்படுத்தப்படாத ஒவ்வொரு நபருக்கும் இடையிலான தொடர்பாகும்.

இது தொடர்பாக அமைச்சர் கதிர்காமருக்கு தெளிவான நோக்கு இருந்தது. அதனால்தான் நாங்கள் அவரை வெளியுறவு அமைச்சின் தொலைநோக்கு அமைச்சர் என்ற அழைக்கின்றோம்.

இந்தக்கட்டுரையை எழுதியவர் சீவலி

எழுத்தாளர் பல துறைகளில் அனுபவங்களை கொண்ட முன்னாள் இராஜதந்திரி ஆவார்.