மீண்டும் இரத்தபூமியான ஆப்கானிஸ்தான் :காபூல் தாக்குதலில் இதுவரை 110 பேர் பலி; 150க்கும் மேற்பட்டோர் காயம்

0
177
Article Top Ad

காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதை அடுத்து தலிபான்கள் ஒவ்வொரு மாகாணத்தையாக கைப்பற்றத் தொடங்கினர்.

கடந்த 15 ஆம் தேதி தலைநகர் காபூலையும் கைப்பற்றிவிட்டனர். இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை விமானங் கள் மூலமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்களும் அண்டை நாடுகளுக்குத் தப்பி செல்ல முயன்று வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்துக்கு உள்ளும் வெளியும் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

விமான நிலையத்தை அமெரிக்காவின் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். காபூல் நகரை தலிபான் கைப்பற்றியதில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நேற்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. விமான நிலையத்தின் அபே வாயில் அருகிலும், அந்த வாயில் அருகிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அருகிலும் இந்த குண்டு வெடிப்புகள் நடந்தன.

இதில், அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர் உட்பட 72 பேர் கொல்லப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற் றுள்ளது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 110 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்

காபூல் குண்டு வெடிப்பை தொடர்ந்து மேற்கத்திய நாடுகளை விமர்சித்துள்ளார் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கய் லாவ்ரோவ்.

‘இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: முற்றிலும் அந்நிய மதிப்புகளை புகுத்த நினைத்தால் அது பேராபத்தாகதான் முடியும்.’ என இத்தாலியின் வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு தெரிவித்தார் செர்கய் லாவ்ரவ்.

‘வெளிநாடுகளில் மேலும் நடவடிக்கைகளை தொடர நினைக்கும் அரசியல்வாதிகள் இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், அனைத்து அரசியல் சக்திகளையும் அடக்கிய ஒரு அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் அமைய வேண்டும் என தெரிவித்தார்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தங்களின் குடிமக்கள் மற்றும் தங்களுக்காக பணியாற்றியவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கும் முயற்சியில் தீவிரம் காட்ட, தாலிபன் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியாகவுள்ளது ரஷ்யா.

ரஷ்யா கடந்த சில நாட்களில் தாலிபனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு முன்னாள் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இருந்த ஆப்கன் அரசு ரஷ்ய அதிபர் தூதர் வெளிப்படையாக தாலிபனுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தியது. ஆனால் அதை ரஷ்யா மறுத்திருந்தது.