கிராண்ட் பிரிக்ஸ் கார்ப்பந்தயத்தில் வருடத்தின் 6வது சம்பியன் பட்டத்தை வென்றெடுத்த லீவிஸ் ஹெமில்டன்

0
185
Article Top Ad

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் பிரேஸிலியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம் 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி நடப்பு ஆண்டின் 19ஆவது சுற்றான பிரேஸிலியன் கிராண்ட் பிரிக்ஸ்  கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோஸ் கார்லோஸ் பேஸ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 305.909 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன் பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 32 நிமிடங்கள் 22.851 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 10.496 வினாடிகள் பின்தங்கிய நிலையில்இ பந்தய தூரத்தை கடந்த ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர் இரண்டாம் இடத்திற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

13.576 வினாடிகள் பின்தங்கிய நிலையில் பந்தய தூரத்தை கடந்த மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 18 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 19 சுற்றுகளின் முடிவில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் ஒன்பது வெற்றிகளுடன் 332.5 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹமில்டன் ஆறு வெற்றிகளுடன் 318.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ் ஒரு வெற்றியுடன் 203 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அடுத்த இருபதாவது சுற்றான கட்டார் கிராண்ட் பிரிக்ஸ் எதிர்வரும் 21ஆம் திகதி லோசைல் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.