நட்புறவுடன் நிறைவுப்பெற்ற சீன- அமெரிக்க ஜனாதிபதிகளின் பேச்சுவார்த்தை!

0
170
Article Top Ad


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை அன்பு பறிமாற்றத்துடன் நிறைவுப்பெற்றுள்ளது.

இருநாட்டு தலைவர்களுக்கான முதல் நேருக்கு நேர் மெய்நிகர் உச்சிமாநாடு  திங்கட்கிழமை மாலை இரவு 8 மணியளவில் நடைபெற்றது.

தாய்வான் விவகாரம், வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விவகாரங்களில் உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இதன்போதுஇ இருவரும் ஒருவரையொருவர் அன்புடன் வரவேற்றனர். சீன ஜனாதிபதி ஸிஇ தனது பழைய நண்பர் பைடனைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

இரு நாடுகளும் தங்கள் போட்டி வெளிப்படையான மோதலில் மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இருப்பதாக பைடன் கூறினார்.

நாங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு நிறைய நேரம் செலவிட்டோம். எப்பொழுதும் ஒருவருக்கொருவர் மிகவும் நேர்மையாக தொடர்பு கொண்டோம். மற்றவர் என்ன நினைக்கிறார் என்று நாங்கள் ஒருபோதும் ஆச்சரியப்பட மாட்டோம்’ என்று அவர் மேலும் கூறினார்.

பைடன் ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து இரு தலைவர்களும் நடத்திய மிக முக்கியமான பேச்சுவார்த்தை இதுவாகும்.இரு நாடுகளும் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் ஒன்றாக சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறினார்.

காலநிலை மாற்றம் மற்றும் கொவிட்-19 போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஆரோக்கியமான சீனா- அமெரிக்க உறவுகள் தேவை என்றும் அவர் கூறினார்.

சீனாவும் அமெரிக்காவும் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். சீனா-அமெரிக்க உறவுகளை நேர்மறையான திசையில் முன்னோக்கி நகர்த்துவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என கூறினார்.