ஜோகோவிச் விஸா ரத்து : அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தீர்மானத்தை உறுதிசெய்த நீதிமன்றம்

0
118
Article Top Ad

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் நொவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான விஸாவை அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் ரத்துச் செய்தமைக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்கில் தோல்வியைத்தழுவிய நிலையில் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.

தடுப்பூசி போடப்படாத செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்யும் அரசாங்கத்தின் முடிவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இன்று இடம்பெற்ற மேமுறையீட்டு மனுமீதான விசாரணையில் 34 வயதான நோவக் ஜோகோவிச் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரசாங்கம் வாதிட்டது.

இந்நிலையில் மெல்போர்னில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் விளையமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்னிஸ் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான நொவாக் ஜோகோவிச் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று ரொஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் ஆகியோருடன் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையைப் பதிர்ந்துகொண்டுள்ளார்.

அவுஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் இதுவரை எந்த வீரரைவிடவும் அதிகமாக 9 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் கடந்தாண்டு வென்றதால் தற்போது நடப்புச் சம்பியனாக இருக்கின்றவருமான ஜோகோவிச் இன்றைய நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.