சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா!

0
29
Article Top Ad

சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தனது ராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளார்.

”சுற்றுலாத் துறைத் தலைவராக இருந்த 30 மாதப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போதைய அமைச்சரின் எனது இராஜினாமாக் கோரிக்கையுடன், இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஒரு சிறந்த நாளை அமைய அனைத்து பங்குதாரர்களுக்கும் தொடர்புடைய தரப்பினருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஆதரவளித்து, ஆலோசனை வழங்கிய, நலம்பெற வாழ்த்திய உங்கள் அனைவருக்கும், நன்றி. கடந்த 30 மாதங்களாக எமது தாய்நாட்டிற்கு ஆக்கப்பூர்வமாக பெறுமதி சேர்க்க முடிந்ததை அறிந்தே நான் இன்று வெளியேறுகின்றேன்” – என கிமர்லி பெர்னாண்டோ தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.