பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழவும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் இலங்கைக்கு சிறந்த சந்தர்ப்பம்!

0
53
Article Top Ad

– கனேடிய உயர்ஸ்தானிகர் க்ளோப் தமிழ் இணையத்துக்கு தெரிவிப்பு –

பெரும்பான்மையான மக்கள் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியத்தை உணர்ந்துள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துவரும் இலங்கைக்கு அதிலிருந்து மீண்டெழ சர்வதேச சமூகம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை அதன் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும் என்பதுடன், நாட்டில் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி பொறுப்புக்கூறலின் அவசியத்தை உணர்ந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்தார்.

க்ளோப் தமிழ் இணையத்துக்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலிலேயே இவ்வாறு கூறினார்.

அவரிடம் எழுப்பட்ட கேள்விகளுக்கு வழங்கிய பதில்கள் வருமாறு,

1. இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. நாடு திவாலான நிலையில் உள்ளதாக பலரும் கூறுகின்றனர். திவாலான நாட்டில் பணிப்புரிவது எவ்வாறுள்ளது?

நான் பல திவாலான நாடுகளில் பணியாற்றியுள்ளேன். நாம் இங்குதான் வசிக்கிறோம். கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் எமது தேவைகளையும் பூர்த்தி செய்துக்கொள்கிறோம்.

நவீன யுகத்தில் இலங்கை மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாடு முழுவதும் பயணம் செய்வதால் வடக்கு, கிழக்கு தெற்கு என மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளை காணக்கூடியதாகவுள்ளது.
பல வருடங்களாக இருந்த நெருக்கடிதான் தற்போது உக்கிரமடைந்துள்ளது. இதிலிருந்து இலங்கை மீண்டெழவும் சாதகமான முடிவுகளை எடுக்கவும் ஐரோப்பா மற்றும் சர்வதேச சமூகம் பல்வேறு உதவிகளை இலங்கைக்கு வழங்கிவருகிறது.

2. ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இலங்கை குறித்து கடனாவின் நிலைப்பாடு இத்தருணத்தில் எவ்வாறுள்ளது? பொருளாதார நெருக்கடியுடன் இலங்கை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களிலும் பிரச்சினைகளை சந்தித்துள்ளதே?
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை கடனா தொடர்;ந்தும் ஊக்குவித்து வருகிறது. மனிதவுரிமைகள் பேரவையில் இதுகுறித்து எமது நிலைப்பாடுகளையும் பொறுப்புக்கூறலின் அவசியத்தையும் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம்.

பல்வேறும் சமூகங்கள் வாழும் கடனாவில் நல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் அவசியத்தையும் பாடத்தையும் நாம் உணர்ந்துள்ளோம். கடந்த 60, 70 வருடங்களாக இந்த செயல்பாட்டில் நாம் அனுபவத்தை கொண்டுள்ளோம். பொருளாதார நெருக்கடிகயை தீர்ப்பது போன்று சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் அவசியமாகும்.
இலங்கை என்பது பன்மைத்துவமான சமூக கட்டமைப்பை கொண்ட நாடாகும். மிகவும் சிறப்பான வரலாற்றை கொண்ட ஒரு நாடு. இலங்கையில் பல காலகட்டங்களில் சமூக வளர்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

பொறுப்புப்கூறல் மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தை பெரும்பான்மையான மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். இது இலங்கைக்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழவும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதேவேளை, இலங்கைக்கு தொடர்ச்சியாக கடனா மனிதாபிமான உதிவிகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.