உலகக்கிண்ண வரலாற்றில் படுமோசமான தோல்வியை சந்தித்த இலங்கை

0
102
Article Top Ad

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின.

முதல் இடத்தை பிடிப்பதற்காக இந்தியாவுக்கு இது முக்கியத்தும் மிக்க போட்டியாக உள்ள போதிலும், இலங்கைக்கு இந்த போட்டியில் எவ்வித பயனும் ஏற்பட போவதில்லை.

துடுப்பாட்டத்தில் மிரட்டிய கோலி, கில்
ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இலங்கை அணி சந்தித்த தோல்வியின் காரணமாக இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏற்கனவே பறியோய்விட்டது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது.

இதன்படி முதலில் களமறிங்கி இந்தியா அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தாலும் விராத் கோலி மற்றும் சுக்மன் கில்லின் அதிரடி அணிக்கு வலுவான நம்பிக்கையை அளித்தது.

இந்திய அணியின் முதல் விக்கெட் 4 ஓட்டங்களை பெற்றிருந்த போது வீழ்த்தப்பட்டது. அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா, 4 ஓட்டங்களுடன் மதுசங்க வீசிய யோக்கர் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

2ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த விராத் கோலி மற்றும் சுக்மன் கில் ஆகியோர் 189 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டுவந்தனர்.

இமாலய ஓட்ட இலக்கு இலங்கைக்கு நிர்ணயம்
சுக்மன் கில் 92 ஓட்டங்களையும் விராத் கோலி 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், இறுதியாக அதிரடி காட்டிய ஸ்ரேஸ் ஐயர் 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இந்தியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

358 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கையின் விக்கெட்டுக்கள் முதல் பந்தில் இருந்து மல மல வென சரிய தொடங்கின.

மல மல வென சரிந்த இலங்கையின் விக்கெட்டுகள்
ஒரு வீரரால்கூட ஒரு ஓவரை முழுமையாக நின்ற ஆட முடியாத வகையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் அபாரமாக பந்துகளை வீசியிருந்தனர்.

5 வீரர்கள் எவ்வித ஓட்டங்களை பெறாது பெவிலியன் திரும்பியிருந்தனர்.

இலங்கை அணியை பொறுத்தமட்டில் இரட்டை இலக்கத்தை மூன்று வீரர்கள் மாத்திரமே கடந்திருந்தனர்.

இலங்கை அணியினர் பெற்றுக்கொண்ட ஓட்ட விவரங்கள் வருமாறு,

பந்துவீச்சில் அபாரமாக வீசிய மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் மொஹமட் சமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளதன் மூலம் புள்ளிப்பட்டியலில் தென்னாபிரிக்க அணியை பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

இலங்கை அணியின் இந்த தோல்விக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இலங்கை அணியின் மூத்த வீரர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக இலங்கை அணி தோல்வியை சந்தித்து வருவதற்கு இதனுள் உள்ள அரசியல் மற்றும் வினைத்திறனற்ற தேர்வுகள்தான் காரணமென கூறுகின்றனர்.

உடனடியாக இலங்கை அணி மறுசீரமைக்கப்பட வேண்டுமென கூறும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இலங்கை அணியால் ஐ.சி.சி. போட்டிகளுக்கு தெரிவாகுவதுகூட கடினமென கூறியுள்ளனர்.