93 கோடிக்கு அதிகமான விலைக்கு IPL ஏலத்தில் வாங்கப்பட்ட வீரராக ரிஷப் பாண்ட் சாதனை

0
48
Article Top Ad

IPL ஐபிஎல் என பரவலாக அறியப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகளுக்காக வீரர்களைத் தெரிவுசெய்யும் ஏலம் தற்போது சவுதி அரேபியாவிலுள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றுவருகின்றது.

இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் கடந்த ஐபிஎல் பருவகாலத்தில் டெல்லி கபிடல்ஸ் அணியின் தலைவராக விளங்கியவருமான ரிஷப் பாண்ட் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

பலத்த போட்டியின் பின்னர் ரிஷப் பாண்டை லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் (LSG) அணி 27 கோடி இந்திய ரூபாவிற்கு ($3.20 million)ஏலத்தில் வாங்கியுள்ளது. இது இலங்கை நாணய மதிப்பில் 93 கோடி ரூபாவிற்கும் சற்றே அதிகமாகும் என நாணய மாற்று விகிதத்தை துல்லியமாக கணிக்கும் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.xe.com மதிப்பிட்டுள்ளது.

https://www.xe.com/currencyconverter/convert/?Amount=27&From=INR&To=LKR

ரிஷப் பாண்ட்டை ஏலத்தில் எடுப்பதற்கு முன்பு வரையில் சில நிமிடங்கள் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் ஷ்ரயாஸ் ஐயர். கடந்தாண்டு கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை சம்பியன் பட்டத்தை நோக்கி அணித் தலைவராக வழிநடத்தியவர். ஷ்ரயாஸ் ஐயர். PBKS என அறியப்படும் பஞ்சாப் கிங்ஸ் அணி 26. 75 கோடிகள் இந்திய ரூபாவிற்கு($3.17 million)  ஐயரை விலைக்கு ஏலத்தில் வாங்கியது.இது இலங்கை ரூபாவில் 92 கோடிகளுக்கும் அதிகமாகும். ரிஷப் பாண்ட்டிற்கான ஏலம் நடைபெறும் வரையில் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனை ஐயர் வசம் சில நிமிடங்கள் இருந்தது

இன்று நடைபெறும் ஏலத்திற்கு முன்பு வரை இதுவரைகால ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனை அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டாக் வசம் இருந்தது. கடந்த பருவகாலத்தில் ஐபிஎல் சம்பியன் பட்டம் வென்ற கொல்கொத்தா அணியில் இடம்பெற்றிருந்த மிச்சேல் ஸ்டாக்கை கடந்த ஏலத்தில் 24.75 கோடி இந்திய ரூபாவிற்கு வாங்கப்பட்டிருந்தார். 85 கோடி இலங்கை ரூபா. ஆனால் இம்முறை அவரின் பெறுமதி மிகவும் குறைந்து காணப்பட்டது. இம்முறை ஐபிஎல் ஏலத்தில் மிச்சேல் ஸ்டாக்கை டெல்லி கபிடல்ஸ் அணி 11.75 கோடி இந்திய ரூபாவிற்கே விலைக்கு வாங்கியுள்ளது. இது இலங்கை நாணத்தில் 40 கோடிகளுக்கு சற்றே அதிகமாகும்.

இவர்களைத் தவிர இன்றைய ஏலத்தில் பத்து கோடி இந்திய ரூபாவை விட அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் சிலரின் விபரங்கள் இதோ

ஏலத்தில் வாங்கிய அணி                  வீரர் பெயர்                   தொகை

PBKS – யுஸ்வேந்திர சஹால்- 18 கோடி இந்திய ரூபா- 62 கோடி இலங்கை ரூபா-

PBKS -அர்ஷ்தீப் சிங்- 18 கோடி இந்திய ரூபா- 62 கோடி இலங்கை ரூபா

GT – ஜோஸ் பட்லர் – 15.75 கோடி இந்திய ரூபா

DC-  கே. எல் ராகுல் –  14 கோடி இந்திய ரூபா

GT- மொஹம்மட் சிராஸ் 12.25 கோடி இந்திய ரூபா

SRH- மொஹமட் ஷமி – 10 கோடி இந்திய ரூபா

GT -காகிஷோ ரபாடா – 10.75 கோடி இந்திய ரூபா

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here