ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

0
181
Article Top Ad

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகள் என பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டதோடு, ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமோரி மாகாண கடற்கரையிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவில், 50 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானிய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, வடகிழக்கு கடற்கரைப்பகுதிகளில் மூன்று மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.