இலங்கையில் 25 மாவட்டங்களை பாதித்த ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட பரவலான வெள்ள சேதங்களைப் பற்றிய புதிய புவியியல் பகுப்பாய்வை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) வெளியிட்டுள்ளது.
அதன் மதிப்பீட்டின்படி, 1.1 மில்லியன் ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த நிலப்பரப்பின் சுமார் 20%, அதாவது ஐந்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
இதனால் வீடுகள், வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள், குடிநீர், மின்சாரம், சுகாதார சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.
UNDP மேலும் தெரிவித்ததாவது:
-
2.3 மில்லியனுக்கும் அதிகமானோர் வெள்ளத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
இவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்கள், அதனால் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பாலின அடிப்படையிலான தேவைகள் முக்கியத்துவம் பெற வேண்டியுள்ளது.
டிட்வா புயல் உருவாக்கிய சேதங்களின் உண்மையான அளவையும், அது நாட்டின் வாழ்வாதாரம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஏற்படுத்தும் நீண்டகால தாக்கத்தையும் இந்த அறிக்கை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

