Sunday, 15 November 2026
நாணய மாற்று 🍁 1 CAD
  • Rs LKR 233.55 ■ 0.00%
  • ₹ INR 66.05 ■ 0.00%
  • $ USD 0.7013 ■ 0.00%
  • € EUR 0.6356 ■ 0.00%
  • £ GBP 0.5305 ■ 0.00%
  • A$ AUD 1.0336 ■ 0.00%
புதுப்பிப்பு: 2026-11-15 14:06
வானிலை
7°C
மேகமூட்டம்
▲ 8° ▼ 1°
  • உணர்வு3°
  • ஈரப்பதம்63%
  • காற்று16 km/h
அண்மைச் செய்திகள்
ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் அளிக்கும் அபூர்வ கௌரவம் – இனி 7ஆம் இலக்கம் கூட மாறுகிறது! தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார் 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மைக்ரோசொப்ட் சேவைத் தடை — ரொறன்ரோ மருத்துவமனைகளிலும் மின்னஞ்சல் பாதிப்பு ஜென்சன் ஹுவாங் குறித்த செய்தியால் கவனம் பெற்ற கிம்பர்லி பவல் யார்? ஆர்க்டிக் பகுதியில் எண்ணெய், எரிவாயு அகழ்வுக்கு தடை – நீக்குவது குறித்து இன்னும் முடிவில்லை ; மார்க் கார்னி கனடா முழுவதும் போர் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நான்கு நாடுகளுக்கு பயணமாகும் பிரதமர் மார்க் கார்னி பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் மழை பெய்யுமென எச்சரிக்கை LNG எரிவாயுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் – கனடாவின் ஆறு முக்கிய ஓய்வூதிய நிதிகளுக்கு சட்ட எச்சரிக்கை கனடாவின் புதிய வரவு செலவுத் திட்டம் : பொருளாதாரத்தை வலுப்படுத்த 142.1 பில்லியன் டொலர் ஒதுக்கீடு
உடனடிச் செய்திPrimary News

ஆர்க்டிக் பகுதியில் எண்ணெய், எரிவாயு அகழ்வுக்கு தடை – நீக்குவது குறித்து இன்னும் முடிவில்லை ; மார்க் கார்னி

பகிர்FacebookWhatsAppXTelegram

கனடாவின் ஆர்க்டிக் கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வுப் பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்தத் தடையை நீக்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கனடாவின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆர்க்டிக் கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு நடவடிக்கைகளின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்காக நான்கு ஆண்டுகளில் 11 மில்லியன் கனேடிய டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த நிதி ஒதுக்கீடு அகழ்வுத் தடையை நீக்குவதற்கான தீர்மானம் அல்ல என மார்க் கார்னி தெரிவித்துள்ளார். மாறாக, ஆர்க்டிக் பிராந்தியத்தின் இயற்கை வளங்கள் தொடர்பான தீர்மானங்களில் இனுயிட் பழங்குடியின மக்களின் பங்களிப்பையும் நிர்வாகத் திறனையும் வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் தடையை நீக்குவது தொடர்பில் ஏதேனும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றால், பழங்குடியின மக்களின் உரிமைகள், பிராந்திய அரசாங்கங்களின் தன்னாட்சி அதிகாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தரநிலைகள் மதிக்கப்படும் என கனடாவின் வடக்கு மற்றும் ஆர்க்டிக் விவகார அமைச்சர் ரெபேக்கா சார்லன்ட் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அப்போதைய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இணைந்து ஆர்க்டிக் கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளுக்குத் தடை விதித்திருந்தனர்.

ஆர்க்டிக் பிராந்தியத்தின் உணர்திறன் மிக்க கடல் சூழலையும், கடல்வாழ் உயிரினங்களையும் எண்ணெய்க் கசிவுகளிலிருந்து பாதுகாப்பதே இந்தத் தடையின் பிரதான நோக்கமாகும்.

குறித்த தடை 2028ஆம் ஆண்டில் காலாவதியாகவுள்ள நிலையில், அதனைத் தொடர்வதா அல்லது மாற்றியமைப்பதா என்பது தொடர்பான விவாதங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

ஆர்க்டிக் பிராந்தியத்தில் காணப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வடக்கு கனடாவின் பொருளாதார தன்னிறைவை அதிகரிக்க முடியும் என சில பிராந்தியத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளை, எண்ணெய் அகழ்வினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

உங்கள் கருத்து

Your email address will not be published. Required fields are marked *