Sunday, 15 November 2026
நாணய மாற்று 🍁 1 CAD
  • Rs LKR 233.55 ■ 0.00%
  • ₹ INR 66.05 ■ 0.00%
  • $ USD 0.7013 ■ 0.00%
  • € EUR 0.6356 ■ 0.00%
  • £ GBP 0.5305 ■ 0.00%
  • A$ AUD 1.0336 ■ 0.00%
புதுப்பிப்பு: 2026-11-15 14:06
வானிலை
7°C
மேகமூட்டம்
▲ 7° ▼ 1°
  • உணர்வு2°
  • ஈரப்பதம்63%
  • காற்று18 km/h
அண்மைச் செய்திகள்
ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் அளிக்கும் அபூர்வ கௌரவம் – இனி 7ஆம் இலக்கம் கூட மாறுகிறது! தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார் 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மைக்ரோசொப்ட் சேவைத் தடை — ரொறன்ரோ மருத்துவமனைகளிலும் மின்னஞ்சல் பாதிப்பு ஜென்சன் ஹுவாங் குறித்த செய்தியால் கவனம் பெற்ற கிம்பர்லி பவல் யார்? ஆர்க்டிக் பகுதியில் எண்ணெய், எரிவாயு அகழ்வுக்கு தடை – நீக்குவது குறித்து இன்னும் முடிவில்லை ; மார்க் கார்னி கனடா முழுவதும் போர் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நான்கு நாடுகளுக்கு பயணமாகும் பிரதமர் மார்க் கார்னி பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் மழை பெய்யுமென எச்சரிக்கை LNG எரிவாயுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் – கனடாவின் ஆறு முக்கிய ஓய்வூதிய நிதிகளுக்கு சட்ட எச்சரிக்கை கனடாவின் புதிய வரவு செலவுத் திட்டம் : பொருளாதாரத்தை வலுப்படுத்த 142.1 பில்லியன் டொலர் ஒதுக்கீடு
பிரத்தியேகம்Canada

நான்கு நாடுகளுக்கு பயணமாகும் பிரதமர் மார்க் கார்னி

பகிர்FacebookWhatsAppXTelegram

கனடாவின் சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மார்க் கார்னி இன்று (11) பல நாடுகளுக்கான அரசமுறைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதன்படி, அயர்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை நீடிக்கவுள்ள இந்தப் பயணத்தின்போது, நான்கு முக்கிய சர்வதேச மாநாடுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.

முதற்கட்டமாக அயர்லாந்தின் டப்ளின் நகருக்குச் செல்லும் மார்க் கார்னி, நாளை நவம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஐரோப்பிய அரசியல் சமூக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்குச் சென்று, நவம்பர் 15 முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இதன்போது, கனடா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இறுதிப்படுத்துவது குறித்தும், கனடா – பிலிப்பைன்ஸ் இடையிலான புதிய வர்த்தக உடன்படிக்கையை நிறைவு செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

தொடர்ந்து கம்போடியாவுக்குச் செல்லும் அவர், பிராங்கோபோனி உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

இறுதியாக சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (APEC) தலைவர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார்.

இந்த மாநாட்டின்போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்திக்கவும் மார்க் கார்னி திட்டமிட்டுள்ளார்.

கனடா – சீனா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், சர்வதேச பாதுகாப்புச் சூழல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

இந்தப் பயணத்தின் ஊடாக புதிய சந்தைகளை உருவாக்குதல், கனேடியப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் சர்வதேச முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவற்றை கனடா அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.

பிரதமர் மார்க் கார்னி நவம்பர் 19ஆம் திகதி மீண்டும் கனடா திரும்பவுள்ளார்.

உங்கள் கருத்து

Your email address will not be published. Required fields are marked *