Sunday, 15 November 2026
நாணய மாற்று 🍁 1 CAD
  • Rs LKR 233.55 ■ 0.00%
  • ₹ INR 66.05 ■ 0.00%
  • $ USD 0.7013 ■ 0.00%
  • € EUR 0.6356 ■ 0.00%
  • £ GBP 0.5305 ■ 0.00%
  • A$ AUD 1.0336 ■ 0.00%
புதுப்பிப்பு: 2026-11-15 11:06
வானிலை
6°C
தெளிவான வானம்
▲ 8° ▼ 1°
  • உணர்வு1°
  • ஈரப்பதம்65%
  • காற்று17 km/h
அண்மைச் செய்திகள்
ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் அளிக்கும் அபூர்வ கௌரவம் – இனி 7ஆம் இலக்கம் கூட மாறுகிறது! தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார் 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மைக்ரோசொப்ட் சேவைத் தடை — ரொறன்ரோ மருத்துவமனைகளிலும் மின்னஞ்சல் பாதிப்பு ஜென்சன் ஹுவாங் குறித்த செய்தியால் கவனம் பெற்ற கிம்பர்லி பவல் யார்? ஆர்க்டிக் பகுதியில் எண்ணெய், எரிவாயு அகழ்வுக்கு தடை – நீக்குவது குறித்து இன்னும் முடிவில்லை ; மார்க் கார்னி கனடா முழுவதும் போர் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நான்கு நாடுகளுக்கு பயணமாகும் பிரதமர் மார்க் கார்னி பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் மழை பெய்யுமென எச்சரிக்கை LNG எரிவாயுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் – கனடாவின் ஆறு முக்கிய ஓய்வூதிய நிதிகளுக்கு சட்ட எச்சரிக்கை கனடாவின் புதிய வரவு செலவுத் திட்டம் : பொருளாதாரத்தை வலுப்படுத்த 142.1 பில்லியன் டொலர் ஒதுக்கீடு

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் மழை பெய்யுமென எச்சரிக்கை

பகிர்FacebookWhatsAppXTelegram

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்குக் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக வீசிவரும் வளிமண்டல ஆறுகள் (Atmospheric Rivers) காரணமாக தென்மேற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதன்படி, வான்கூவர் தீவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் 250 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையும், ஹோவ் சவுண்ட் மற்றும் சீ டு ஸ்கை பகுதிகளில் 160 மில்லிமீற்றர் வரையான மழையும் பெய்யக்கூடும் என கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மெட்ரோ வான்கூவர் பகுதிகளில் சுமார் 120 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வான்கூவர் தீவு மற்றும் தெற்குக் கரையோரப் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் மழையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்குவதுடன், சில வீதிகளில் போக்குவரத்து தடைப்படலாம் எனவும், மலைச்சரிவுகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு வான்கூவர் தீவு மற்றும் ஹைடா குவாய் பகுதிகளில் மணிக்கு 110 கிலோமீற்றர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வானிலை காரணமாக வான்கூவர் தீவின் வடகிழக்குக் கடற்பகுதியில் காணாமல் போன 35 வயதுடைய டகோட்டா ஸ்மித்தைத் தேடும் நடவடிக்கைகளும் பாதுகாப்புக் காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற அவர் பயணித்த படகு கவிழ்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை, பலத்த காற்று மற்றும் கடல் நீரின் குறைந்த வெப்பநிலை காரணமாக உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பெய்யும் மழையைக் கருத்திற்கொண்டு, வெள்ள அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும், ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்து

Your email address will not be published. Required fields are marked *