Sunday, 15 November 2026
நாணய மாற்று 🍁 1 CAD
  • Rs LKR 233.55 ■ 0.00%
  • ₹ INR 66.05 ■ 0.00%
  • $ USD 0.7013 ■ 0.00%
  • € EUR 0.6356 ■ 0.00%
  • £ GBP 0.5305 ■ 0.00%
  • A$ AUD 1.0336 ■ 0.00%
புதுப்பிப்பு: 2026-11-15 11:06
வானிலை
6°C
தெளிவான வானம்
▲ 8° ▼ 1°
  • உணர்வு1°
  • ஈரப்பதம்65%
  • காற்று17 km/h
அண்மைச் செய்திகள்
ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் அளிக்கும் அபூர்வ கௌரவம் – இனி 7ஆம் இலக்கம் கூட மாறுகிறது! தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார் 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மைக்ரோசொப்ட் சேவைத் தடை — ரொறன்ரோ மருத்துவமனைகளிலும் மின்னஞ்சல் பாதிப்பு ஜென்சன் ஹுவாங் குறித்த செய்தியால் கவனம் பெற்ற கிம்பர்லி பவல் யார்? ஆர்க்டிக் பகுதியில் எண்ணெய், எரிவாயு அகழ்வுக்கு தடை – நீக்குவது குறித்து இன்னும் முடிவில்லை ; மார்க் கார்னி கனடா முழுவதும் போர் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நான்கு நாடுகளுக்கு பயணமாகும் பிரதமர் மார்க் கார்னி பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் மழை பெய்யுமென எச்சரிக்கை LNG எரிவாயுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் – கனடாவின் ஆறு முக்கிய ஓய்வூதிய நிதிகளுக்கு சட்ட எச்சரிக்கை கனடாவின் புதிய வரவு செலவுத் திட்டம் : பொருளாதாரத்தை வலுப்படுத்த 142.1 பில்லியன் டொலர் ஒதுக்கீடு

ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் அளிக்கும் அபூர்வ கௌரவம் – இனி 7ஆம் இலக்கம் கூட மாறுகிறது!

பகிர்FacebookWhatsAppXTelegram

கால்பந்து உலகில் சில வீரர்கள் சாதனைகளால் வரலாறு படைப்பார்கள். ஆனால், ஒரு சிலரின் அடையாளங்களே வரலாறாக மாறிவிடும். அப்படிப்பட்ட ஒரு பெயர்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo)!

போர்த்துக்கல் தேசிய அணிக்காக 23 ஆண்டுகள் விளையாடிய ரொனால்டோ, சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு வித்தியாசமான முறையில் கௌரவம் அளிக்க போர்த்துக்கல் கால்பந்து அணி முடிவு செய்துள்ளது.

ரொனால்டோ அணிந்த 7ஆம் இலக்கத்தை இனி வேறு எந்த வீரரும் அதே வடிவத்தில் அணியமாட்டார்கள்!

போர்த்துக்கல் அணியின் சீருடைகளில் இடம்பெறும் 7ஆம் இலக்கத்தின் வடிவமைப்பில் சிறிய மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி, இனிவரும் காலங்களில் 7ஆம் இலக்கத்தின் நடுப்பகுதியில் ஒரு குறுக்குக்கோடு சேர்க்கப்படும்.

இதன்மூலம் ரொனால்டோ தனது 23 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் அணிந்திருந்த புகழ்பெற்ற 7ஆம் இலக்கத்தின் தனித்துவம் பாதுகாக்கப்படும்.

தனது ஆறாவது உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற சில மாதங்களுக்குப் பின்னர் சர்வதேச கால்பந்திலிருந்து விடைபெறும் ரொனால்டோ, போர்த்துக்கல் அணிக்காக 146 சர்வதேச கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

அத்துடன், 2016ஆம் ஆண்டு போர்த்துக்கல் அணி ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கும் தலைமை தாங்கியிருந்தார்.

வீரர்கள் ஓய்வு பெறலாம். ஆனால், அவர்கள் உருவாக்கிய வரலாறும் அடையாளங்களும் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை!

ரொனால்டோவின் 7ஆம் இலக்கம் அதற்குச் சிறந்த உதாரணம்.

 

உங்கள் கருத்து

Your email address will not be published. Required fields are marked *